டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் தடகளப் பிரிவில் 4X400 தொடர் ஓட்டப்பந்தய தகுதிச்சுற்றுப் போட்டிகள் (ஹீட் 1,2) இன்று (ஆக.6) நடைபெற்றன.
இதில், முகமது அனஸ், டாம் நோவா நிர்மல், ஆரோக்கிய ராஜிவ், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் பங்கேற்ற இந்திய அணி ஹீட் 2 பிரிவில் பங்கேற்றது.
ஒரு இடத்தில் மிஸ்ஸான வாய்ப்பு
தகுதிச்சுற்றில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதிபெறும். இந்திய அணி, 3:00.25 நேரத்தில் இலக்கை கடந்து அந்த ஹீட்டில் நான்காவது இடத்தைப் பிடித்து, ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இதனால், இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியுள்ளது.
-
Area and national records tumble in the #Tokyo2020 men's 4x400m heats 👀
— World Athletics (@WorldAthletics) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Area and national records tumble in the #Tokyo2020 men's 4x400m heats 👀
— World Athletics (@WorldAthletics) August 6, 2021Area and national records tumble in the #Tokyo2020 men's 4x400m heats 👀
— World Athletics (@WorldAthletics) August 6, 2021
முன்னதாக, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் பெற்ற கத்தார் அணி, 3:00.56 நேரத்தில் 4X400 இலக்கை கடந்திருந்ததுதான் ஆசிய அளவிலான சாதனையாக இருந்தது.
இந்நிலையில், இந்திய அணி தற்போது 3:00.25 கடந்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. தடகள வீரர் ஆரோக்கிய ராஜிவ் திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: TOKYO OLYMPICS: கண்ணீர் சிந்திய வீராங்கனைகள்; பிரதமர் ஆறுதல்