டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்திற்கு எறிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. நீரஜ் சோப்ராவை பாராட்டி அரசியல் தலைவர்கள் முதல் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ராவிற்கு அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ரூ. 6 கோடி பரிசுத் தொகையுடன் கிரேடு 1 அரசுப் பணியும் அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றிருந்தார். இவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
வெற்றி பெற்ற புனியாவைப் பாராட்டி ஹரியானா அரசு ரூ. 2.5 கோடி பரிசுத் தொகையும், அரசுப் பணியும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நிறைவேறிய நூற்றாண்டு கனவு; தங்கம் வென்றார் நீரஜ்