ETV Bharat / sports

TOKYO PARALYMPICS: டோக்கியோ சென்றது 12 பேர் கொண்ட இந்திய அணி!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தேவேந்திர ஜகாரியா, சந்தீப் சௌத்ரி உள்பட 12 பேர் அடங்கிய இந்திய அணியின் ஒரு குழுவினர் இன்று (ஆக. 25) டோக்கியோ சென்றடைந்தது.

தேவேந்திர ஜகாரியா, Devendra Jhajharia, Tokyo Paralympics, டோக்கியோ பாரா ஒலிம்பிக்
TOKYO PARALYMPICS
author img

By

Published : Aug 25, 2021, 5:11 PM IST

டெல்லி: 2020 டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றனர். நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சிறப்பித்தார்.

சம்மர் ஒலிம்பிக் முன்னதாக நிறைவடைந்த நிலையில் அடுத்து, மாற்றுத் திறனாளிக்கள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் நேற்று (ஆக. 24) தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

இந்தியா இன்று

முன்னதாக, இன்று நடைபெற்ற பெண்கள் தனிநபர் சி-3 டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சோனல்பென் மதுபாய் பட்டேல் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க 12 பேர் அடங்கிய இந்திய அணியின் ஒரு குழுவினர் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு டோக்கியோ சென்றடைந்தனர். இந்த குழுவில், ஈட்டி எறிதல் வீரர்களான தேவேந்திர ஜகாரியா, சந்தீப் சௌத்ரி; உயரம் தாண்டுதல் வீரர்களான நிஷாத் குமார், ராம் பால்; வட்டு எறிதல் வீரரான யோகேஷ் கத்துனியா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஈட்டி எறிதலில் பெரும் நம்பிக்கை

பாரா ஒலிம்பிக்கில் இரண்டு முறை (2004, 2016) தங்கம் வென்றுள்ள தேவேந்திர ஜகாரியா, இம்முறையும் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார். 40 வயதான ஜகாரியா, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் 65.71 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து, 63.97 மீட்டர் தூரம் என்ற தனது உலக சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தேவேந்திர ஜகாரியா, Devendra Jhajharia, Tokyo Paralympics, டோக்கியோ பாரா ஒலிம்பிக்
ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜகாரியா

இவருக்கு போட்டியாக இந்திய வீரர்கள் அஜித் சிங், சுந்தர் குர்ஜர் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளதால், ஈட்டி எறிதல் ஆடவர் எஃப்-46 பிரிவில் இந்தியா மூன்று பதக்கங்களை வெல்லுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியனான சந்தீப் சௌத்ரியும் எஃப்-64 பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடியவர்களின் வரிசையில் முதன்மையாக உள்ளார்.

எஃப்-46 : கை தொடர்பான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பிரிவு (athletes with arm deficiency, impaired muscle power or impaired passive range of movement in arms while competing in a standing position)

எஃப்-64: கால் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பிரிவு (athletes with a leg amputation, who compete with prosthetics in a standing position)

பாரா ஒலிம்பிக்கின் தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்குகின்றன.

இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக் 2020: மாரியப்பன் கலந்துகொள்வதில் சிக்கலா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.