ETV Bharat / sports

தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய ஒசாகா! - சர்வதேச மகளிர் தரவரிசைப் பட்டியல்

அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஜப்பானின் நவோமி ஒசாகா, சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

US Open title helps Osaka climb to No.3 in WTA Rankings

author img

By

Published : Sep 15, 2020, 10:31 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரபல டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் கோப்பையைக் கைப்பற்றி அசத்தினர்.

இதற்கிடையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு, வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (செப்.14) வெளியிட்டுள்ளது.

இதில் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒசாகா மூன்றாமிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்

அதேச்சமயம் இறுதிச்சுற்றில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 13 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க:அந்தச் சம்பவம், வாழ்க்கைக்காக பாடம் - நோவக் ஜோகோவிச்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.