லண்டனில் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜோர்ன் போர்க் குரூப்பில் இடம்பெற்றுள்ள உலகின் முன்னணி வீரரான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார்.
ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் டொமினிக் தீமிடன் தோல்வியைத் தழுவிய ஃபெடரர், இந்தப் போட்டியில் தனது இயல்பான ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், ஃபெடரர் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி பெரெட்டினிக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபெடரர் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
-
58 #NittoATPFinals wins for @rogerfederer 😮
— ATP Tour (@atptour) November 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The six-time champ gets his first victory of the 2019 tournament defeating Berrettini in two sets.
🎥: @TennisTV pic.twitter.com/Fl5UkmdF9H
">58 #NittoATPFinals wins for @rogerfederer 😮
— ATP Tour (@atptour) November 12, 2019
The six-time champ gets his first victory of the 2019 tournament defeating Berrettini in two sets.
🎥: @TennisTV pic.twitter.com/Fl5UkmdF9H58 #NittoATPFinals wins for @rogerfederer 😮
— ATP Tour (@atptour) November 12, 2019
The six-time champ gets his first victory of the 2019 tournament defeating Berrettini in two sets.
🎥: @TennisTV pic.twitter.com/Fl5UkmdF9H
இதன்மூலம் ஃபெடரர் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தினார்.
இதையும் படிங்க: 'சீனியர்களுக்குத் தண்ணீர் காட்டும் ஜூனியர்ஸ்' - நடாலுக்கும் ஏற்பட்டது தோல்வி!