ETV Bharat / sports

டென்னிஸ் தரவரிசை: ஒசாகா, மெத்வதேவ் முன்னேற்றம்!

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் முடிவடைந்த நிலையில் சர்வதேச டென்னிஸ் நிபுணர் குழு வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (பிப்.23) வெளியிட்டுள்ளது.

Osaka back to No. 2; Medvedev No. 3; Karatsev jumps 72 spots

author img

By

Published : Feb 23, 2021, 4:44 PM IST

Updated : Feb 23, 2021, 7:46 PM IST

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச டென்னி நிபுணர் குழு வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், ஆஸ்திரேலியன் ஓபனில் இரண்டாம் இடம் பிடித்த ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

அதேசமயம் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நவோமி ஒசாகா சிமோனா ஹெலப்பை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.

இதையும் படிங்க: உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்

Last Updated : Feb 23, 2021, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.