தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தோடு இணைந்து சேலம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் நடத்தும் மேற்கு மண்டல கூடைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் தொடங்கியது.
இதன் முதலாவது ஆட்டத்தில் கோவை எஸ்டிஏபி அணியுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அணி மோதின. இந்த விளையாட்டு போட்டியை மாநகராட்சி ஆணையர் சதீஸ் தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்ட விளையாட்டுத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சாம்பியன்ஷிப் தொடரில் சேலம் உட்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 60 கூடைப்பந்தாட்ட அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளத்தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''கண்ணாடியைத் திருப்புனா எப்படிணே வண்டி ஓடும்'' - மீண்டும் பயிற்சியாளரை மாற்றிய கிங்ஸ் லெவன் அணி!