ETV Bharat / sports

Asian Games 2023: தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

vithya ramraj
வித்யா ராம்ராஜ்
author img

By ANI

Published : Oct 3, 2023, 10:07 PM IST

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்துள்ளார்.

வித்யா ராம்ராஜ் 55.68 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டியில் பஹ்ரைன் வீராங்கனையான ஒலுவாகேமி முஜிதத் அடேகோயா 54.45 விநாடிகளில் இலக்கை எட்டி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் சீன வீராங்கனையான மோ ஜியாடி 55.01 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் 4-வது இடத்தில் நீடித்த வித்யா ராம்ராஜ் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு மூன்றாவது இடத்துக்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை வென்றார். தமிழக வீராங்கனையான இவர் கோவையைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் நேற்று நடந்த தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தின் ஹீட் சுற்றின் போது இந்தியாவின் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 39 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து அசத்தி இருந்தார்.

1984-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷா 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்து இருந்தார். இந்திய வீராங்களைகளிடையே 39 ஆண்டுகளாக அதுவே சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சாதனையை நேற்று வித்யா ராம்ராஜ் சமன் செய்து இருந்தார். மேலும் இந்த சாதனையே வித்யா ராமராஜின் சிறந்த ரெக்கார்ட் ஆகவும் பதிவானது.

இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் 55.68 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வித்யா ராம்ராஜ் அவரது சிறந்த ரெக்கார்டான 55.42 விநாடியை விட .26 விநாடி பின்தங்கி உள்ளார். நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Congrats to Vithya Ramraj for winning the Bronze medal in Women’s 400m Hurdles event.

    Her tenacity and determination has led to this truly promising performance. Best wishes for her future endeavours. pic.twitter.com/RTniT2Mdjz

    — Narendra Modi (@narendramodi) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், வித்யா ராம்ஜாஜ் வெண்கலப் பதக்கம் வென்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும் உறுதியும் அவரது இந்த செயல்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. அவளுடைய எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும் வாழ்த்து தெரிவித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “வித்யா வெண்கலத்தை வென்றார்! ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.68 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்ற வித்யா ராம்ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • VITHYA CLINCHES A SMASHING BRONZE 🥉

    Heartiest congratulations to Vithya Ramraj on her outstanding performance in the Women's 400m Hurdles at the #AsianGames2022, securing the bronze medal with a timing of 55.68s 🏃‍♀️

    Vithya's journey has been commendable, and her fantastic run… pic.twitter.com/h6UZD14CeS

    — Anurag Thakur (@ianuragthakur) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வித்யாவின் பயணம் பாராட்டுக்குரியது, மேலும் ஹீட்ஸில் அவரது அற்புதமான செயல்பாடு வரலாற்றில் இடம்பெற்றது. அவர் புகழ்பெற்ற பி.டி.உஷாவின் 39 ஆண்டுகால தேசிய சாதனையைச் சமன் செய்தார். இது அவரது நம்பமுடியாத திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.

பாராட்டுக்கள், வித்யா! உங்கள் சாதனைகள், நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக உள்ளன. மேலும், நீங்கள் சிறந்து விளங்கப் பாடுபடும் உங்கள் பயணத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Cricket World Cup 2023: கே.எல்.ராகுலா? இஷான் கிஷனா? மனம் திறந்த இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.