ETV Bharat / sports

தேசிய தடகள சாம்பியன்ஷிப்: பதக்கங்களை குவிக்கும் தமிழ்நாடு!

author img

By

Published : Mar 17, 2021, 5:18 PM IST

Updated : Mar 17, 2021, 5:28 PM IST

தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற தடை ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமணி, மகளிர் பிரிவில் கனிமொழி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

Tamil Nadu players bags gold in National Federation Cup

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டமும், மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டமும் நடைபெற்றது.

இதில், ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் வீரமணி வெற்றி இலக்கை 14.57 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

அதேபோல் மகளிர் தடை ஓட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை கனிமொழி வெற்றி இலக்கை 13.63 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும், நித்யா ராம்ராஜ் 14.08 வினாடிகளில் வெற்றி இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தினர்.

முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டூட்டி சந்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்ற தமிழச்சி!

Last Updated : Mar 17, 2021, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.