மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக இந்தியாவில் உள்ள 54 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதில் பாராலிம்பிக் கூட்டமைப்பு, ரோவிங் ஃபெடரேஷன், ஜிம்னாஸ்டிக்ஸ் ஃபெடரேஷன், சுசில்குமார் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரங்கள் மறுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கு ஓராண்டு கால அளவில் அங்கீகாரம் வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையில் மட்டுமே அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா, விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரங்கள் டிசம்பர் மாதம்வரை வழங்கப்படாமல் செப்டம்பர் மாதம்வரை வழங்கப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக், பாராலிம்பிக் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசின் அங்கீகாரம் பெற தீவிரம் காட்டிவந்தார். ஆனால் இந்தாண்டும் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது.
ரோவிங் ஃபெடரேஷன் சார்பாக 2012ஆம் நடத்தப்பட்ட தேர்தலில் பல விளையாட்டு விதிகளை மீறியதால் அவர்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுசில்குமார் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பிற்கு, நிர்வாக ரீதியான பிரச்னைகளால் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தோனியால் ஸ்பெஷலான எனது டெஸ்ட் அறிமுகம் - கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி!