பானிபட்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் தனதாக்கியுள்ளார் நீரஜ் சோப்ரா.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் ”இந்தியாவின் தங்க மகன்” என்று அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியிலேயே 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு நீரஜ் சோப்ரா சிறப்புப் பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில் ”கடினமான உழைப்பு மற்றும் தன்னம்பிக்கைதான் வெற்றி அடைவதற்கான மூலதனம், என தெரிவித்தார்.
ஒவ்வொரு வீரரைப் போலவே நானும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களைப் பெற வேண்டும் என்று கனவு கண்டேன். எனது முயற்சியும் கடின உழைப்பு அந்த இலக்கை அடைய உதவியது மகிழ்ச்சியாக உள்ளது.
ஈட்டி எறிதல் போட்டியில் சாதிக்க துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு உங்களது அறிவுரை?, இந்தியாவில் ஈட்டி எறிதலின் சூழல் மாறி வருகிறது. இந்த விளையாட்டில் நுழையும் இளைஞர்களுக்குப் பதக்கம் வென்றால் பாராட்டு கிடைக்கும் என்ற நோக்கத்தில் விளையாடாமல். மாறாக உங்களுக்கு ஆர்வமாக இருந்தால் மட்டுமே இந்த விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒருவருக்கு எந்த துறையில் ஆர்வமாக உள்ளார்களோ அதைத் தேர்வு செய்து அதற்கேற்ப உழைக்க வேண்டும் அப்போது தான் அதற்கான வெற்றி என்பது கிடைக்கும். விளையாட்டு என்பது ஒருவரது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும், ஒவ்வொருவரும் அதற்குத் தினமும் ஒரு மணி நேரமாவது கொடுக்க வேண்டும் அப்போது தான் நாம் உடலும் மனதும் வலிமையாக இருக்கும்.
குடும்பத்தினரின் ஆதரவு: நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது காரணம் என்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு அளவு கடந்த அன்பு கிடைக்கிறது அது என்னுடைய எல்லாம் வெற்றியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டத்தில் இவ்வளவு சாதனைகளா? கோலி முதல் ஹேசில்வுட் வரை நீங்கள் படிக்க வேண்டியது!