ETV Bharat / bharat

காஷ்மீர் பண்டிட்களின் வீட்டு வசதி சங்கம் நிலம் வாங்க மத்திய அரசு நிதி உதவி!

காஷ்மீரை சேர்ந்த இடம்பெயர்ந்தோருக்கான காஷ்மீரி குடியிருப்பாளர்கள் வீட்டுவசதி கூட்டுறவு சங்கத்தினர் புதுடெல்லியில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராயை சந்தி்த்தனர்.

காஷ்மீர் பண்டிட்கள் (கோப்பு படம்)
காஷ்மீர் பண்டிட்கள் (கோப்பு படம்) (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட்கள் உருவாக்கி உள்ள இடம்பெயர்ந்தோருக்கான காஷ்மீரி குடியிருப்பாளர்கள் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு மத்திய அரசு ஒரு குழுவை அமைப்பதாக உறுதி அளித்துள்ளது.

காஷ்மீரி குடியிருப்பாளர்கள் வீட்டுவசதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அசோக் மன்விதா, செயலாளர் சதீஷ் மஹல்தார், உறுப்பினர் கமல் சவுத்ரி ஆகியோர் டெல்லியில் இன்று உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராயை சந்தித்துப் பேசினர். இடம் பெயர்ந்தோரின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்தும், காஷ்மீர் பண்டிட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய மறுவாழ்வு பணிகள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மஹல்தார்,"வீட்டு வசதி தொடங்கப்பட்டதை மத்திய உள்துறை இணையமைச்சர் வரவேற்றார். மானிய விலையில் நிலம் வாங்குவதற்கும், நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட சாத்தியமான உதவிகளை அரசு அளிக்கும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு உதவி செய்வதற்கு சாத்தியமுள்ள நிதி மற்றும் நிர்வாக ஆதரவு வழங்குவதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

நிலத்தை முழுவதும் இலவசமாக வழங்க இயலாது என்று மத்திய இணை அமைச்சர் தெளிவு படுத்தி இருக்கிறார். பயனாளிகள் பகுதி அளவு தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். அதன்படி 70 சதவிகிதம் அளவுக்கு அரசு நிதி உதவி அளிக்கும். மீதத்தொகையை காஷ்மீர் பண்டிட்டுகள் வழங்க வேண்டும். எங்கள் சங்கத்துக்கு நிலம் வழங்குவதற்கு இந்த விஷயத்தை ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க: "திமுகவுக்கு எதிரான விமர்சனத்தில் நமக்கு கவலை இல்லை" - மாவீரர் நாளில் திருமாவளவன் பேச்சு!

காஷ்மீரில் பண்டிட்டுகளின் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களின் பட்டியலை கொடுக்கும்படி எங்களிடம் கேட்டுள்ளனர். பின்னர் இந்த விஷயத்தை காஷ்மீர் மாநில அரசிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு கூறுகிறது,"என்றார்.

1989ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில சிறுமான்மையினருக்கு எதிராக கொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து காஷ்மீர் பண்டிட்கள் இடம் பெயர்ந்தனர். 2010ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் உயர் அதிகாரிகள் உட்பட 219 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 62 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்டுகள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடங்களை அனாதையாக விட்டு விடடு பாதுகாப்புக்காக ஜம்மு, புதுடெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். காஷ்மீர் பண்டிட்கள் உருவாக்கி உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் 11 காஷ்மீர் பண்டிட்கள், 2 சீக்கியர்கள் உள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.