ETV Bharat / state

வடகிழக்கு பருவமழையால் 33% மேல் பயிர் பாதிப்பு நேரிட்டிருந்தால் கணக்கீடு செய்ய நடவடிக்கை... வேளாண்துறை அமைச்சர் உறுதி! - RAIN AFFECTED

வடகிழக்கு பருவமழையால் நேரிட்ட பயிர் பாதிப்பு குறித்து மழை நின்ற ஓரிரு தினங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில்  மழை நீரால் சூழப்பட்டுள்ள நெற்பயிர்கள்
கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் மழை நீரால் சூழப்பட்டுள்ள நெற்பயிர்கள் (Image credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 7:05 PM IST

சென்னை: வடகிழக்கு பருவமழையால் நேரிட்ட பயிர் பாதிப்பு குறித்து மழை நின்ற ஓரிரு தினங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 57 மி.மீ மழையும், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 148 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதனால் சுமார் 31,853 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நீர் சூழ்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,972 ஏக்கர் பரப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8,151 ஏக்கர் பரப்பிலும், திருவாரூர் மாவட்டத்தில் 2,391 ஏக்கர் பரப்பிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,339 ஏக்கர் பரப்பிலும் நீர் சூழ்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை / தோட்டக்கலை அலுவலர்கள் 1963 நபர்கள் மற்றும் உதவி வேளாண்மை/ தோட்டக்கலை அலுவலர்கள் 3945 நபர்கள் ஆகமொத்தம் 5908 நபர்கள் களப்பணியில் உள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு நீரினை வடிப்பது தொடர்பாகவும் அதன் பின் எடுக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

இதையும் படிங்க: 4 மாநிலங்கள், 11 நாட்கள், 5 பெண்கள் படுகொலை...சீரியல் கில்லரை கைது செய்து குஜராத் போலீசார் விசாரணை!

வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டும். வெள்ள மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நீர் வடிந்தவுடன் மேலுரமாக 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் ஆகியவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு வைத்திருந்து 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன் கலந்து இட வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள் கண்காணித்து வருவாய் துறையுடன் இணைந்து 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,"என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.