ETV Bharat / sports

முதல் சாம்பியன் யார்... தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் மோதல்!

author img

By

Published : Oct 19, 2019, 6:04 PM IST

Updated : Oct 19, 2019, 6:14 PM IST

புரோ கபடி லீக் தொடரின் கோப்பையை முதல்முறையாக கைப்பற்றப்போவது தபாங் டெல்லியா அல்லது பெங்கால் வாரியர்ஸா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Pro Kabaddi

முதல் சாம்பியன் யார்? தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை:

இதுவரை இல்லாத வகையில் இம்முறை புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் போட்டிகள் பல்வேறு திருப்புமுனைகளுடன் நடைபெற்றுவருகின்றன.புரோ கபடி லீக் வரலாற்றில் இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் அண்டர் டாக்ஸாக இருந்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள், முதல்முறையாக இந்த சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நேருக்கு நேர் மோதவுள்ளன.

இதனால், இவ்விரு அணிகளில் எந்த அணி முதல்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்திவந்தனர்.

PKL
தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் மோதல்!

குறிப்பாக, லீக் போட்டிகளின் முடிவுகளில் தபாங் டெல்லி விளையாடிய 22 போட்டிகளில் 15 வெற்றி, நான்கு தோல்வி, மூன்று டை என 85 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில், பெங்கால் வாரியர்ஸ் அணி 22 ஆட்டங்களில் 14 வெற்றி, ஐந்து தோல்வி, மூன்று டை என 83 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தபாங் டெல்லியின் சூப்பர்ஸ்டார் நவின் குமார்:

தபாங் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறக் காரணமாக இருந்தவரே அந்த அணியின் இளம் ரைடர் நவின் குமார் என்றால் மிகையாகாது. அவர் தனது மிரட்டலான ஆட்டத்தால் இந்த சீசனில் 22 போட்டிகளில் 285 புள்ளிகளைப் பெற்றுள்ளார். டெல்லி அணியின் துருப்புச்சீட்டே நவின் குமார் என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 10 போட்டிகளில் அவரை ஒருமுறைகூட அவுட்டாக்க முடியாமல் மற்ற எதிரணியினர் திணறியுள்ளனர்.

நவீன் குமார்
Naveen Kumar

அதுமிட்டுமில்லாமல், புரோ கபடி லீக்கில் தொடர்ந்து 21 முறை 10 புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், டெல்லி அணியில் உள்ள சந்திரன் ரஞ்சித், ஆல்ரவுண்டர் விஜய், மிராஜ் ஷைக் ஆகியோர் நவின் குமாருக்கு ரைடிங்கில் நல்ல கம்பெனியாக இருக்கின்றனர்.

பெங்கால் வாரியர்ஸின் கில்லி மனிந்தர் சிங்:

டெல்லி அணிக்கு நவின் குமார் என்றால், பெங்கால் வாரியர்ஸுக்கு மனிந்தர் சிங். 22 போட்டிகளில் இவர், தனது சிறப்பான ஆட்டத்திறனால், 206 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக புரோ கபடி லீக் சீசனில் அவர் 200 புள்ளிகளைப் பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

Maninder Singh
மனிந்தர் சிங்

குறிப்பாக, இந்த சீசனில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனியொருவராக 19 புள்ளிகளை எடுத்தார். ரைடிங்கில் அவருக்கு பக்கபலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், சுகேஷ் ஹெக்டே, முகமது நவிபாக்ஷ் ஆகியோர் இருக்கின்றனர்.

தபாங் டெல்லியின் டிஃபெண்டிங்:

தபாங் டெல்லியின் டிஃபெண்டர்களைப் பொறுத்தவரையில், ரவிந்தர் பஹால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். 21 போட்டிகளில் 59 புள்ளிகளை பெற்று டெல்லி அணியின் டிஃபெண்டிங்கில் முக்கிய வீரராகத் திகழ்கிறார். மேலும், ரவிந்தர் பஹால், ஜொகிந்தர், மானே, அமித் குமார் ஆகிய நான்கு பேரும் டெல்லி அணியின் டிஃபெண்டிங்கில் தூண்போலச் செயல்படுகின்றனர்.

பெங்கால் வாரியர்ஸின் டிஃபெண்டிங்:

பெங்கால் வாரியர்ஸ் அணியின் டிஃபெண்டிங்கில் பல்தேவ் சிங் சிறப்பாகச் செயல்படுகிறார். 23 போட்டிகளில் 64 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.

இரு அணிகளும் ரைடிங், டிஃபெண்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவதால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையப் போட்டியில் வெற்றிபெறப்போவது தபாங் டெல்லியா அல்லது பெங்கால் வாரியர்ஸா என்பதை போட்டியின் முடிவு வெளிப்படுத்தும்.

Pro Kabaddi
முதல் சாம்பியன் யார்?

முன்னதாக, இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற லீக் போட்டி 30-30 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/other-sports/pro-kabaddi-to-get-first-time-winner-as-delhi-and-bengal-fight-for-trophy/na20191019103451375

Conclusion:
Last Updated : Oct 19, 2019, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.