2019-ஆம் ஆண்டிற்கான புரோ கபடி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் 75ஆவது லீக் போட்டியில் புனேரி பால்தான் அணி யூ மும்பா அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இரு அணி வீரர்களும் முதல் பாதியில் தங்களது டிஃபென்ஸ் பிரிவில் வலிமை வாய்ந்ததாக இருந்தனர். இருந்த போதும் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் யூ மும்பா அணி 16-12 என்ற கணக்கில் புனேரி பால்தான் அணியை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தது.
-
Can an extremely entertaining match not have a winner?
— ProKabaddi (@ProKabaddi) September 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Well, #PUNvMUM sure proved it can!
Relive the #PUNvMUM clash here and keep watching #VIVOProKabaddi action, LIVE on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi #RivalryWeek pic.twitter.com/LH99k9T3Wl
">Can an extremely entertaining match not have a winner?
— ProKabaddi (@ProKabaddi) September 5, 2019
Well, #PUNvMUM sure proved it can!
Relive the #PUNvMUM clash here and keep watching #VIVOProKabaddi action, LIVE on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi #RivalryWeek pic.twitter.com/LH99k9T3WlCan an extremely entertaining match not have a winner?
— ProKabaddi (@ProKabaddi) September 5, 2019
Well, #PUNvMUM sure proved it can!
Relive the #PUNvMUM clash here and keep watching #VIVOProKabaddi action, LIVE on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi #RivalryWeek pic.twitter.com/LH99k9T3Wl
அதன் பின் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் புனேரி பால்தான் அணி அட்டாக்கில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. யூ மும்பா அணியும் விட்டுகொடுக்காமல் அட்டாக்கில் எதிரணியை கலங்கவைத்தது.
இதன் மூலம் யூ மும்பா - புனேரி பால்தான் அணிகள் மோதிய ஆட்டம் 33-33 என்ற புள்ளிகணக்கில் சமனில் முடிவடைந்தது. புனேரி பால்தான் அணி 28 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்தில் நீடிக்கிறது. யூ மும்பா அணி 37 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் நீடிக்கிறது.