சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பு (International Billiards and Snooker Federation) சார்பில் நடத்தப்பட்ட உலக சாம்பியன்ஷிப் பில்லியர்ட்ஸ் போட்டி மியான்மரின் மண்டாலே நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி சார்பில் நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி பங்கேற்றார்.
இத்தொடரின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற பங்கஜ் அத்வானி மியான்மரின் நே-தவே-ஓவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கஜ் அத்வானி 6-2 என்ற புள்ளிக் கணக்கில் மியான்மரின் தவே ஓவை வீழ்த்தினார்.
-
Pankaj Advani defends his World #Billiards (150Up) title#Billiards #Mandalay #Myanmar #WorldBilliardsChampionship2019#WorldBilliardsChampionhttps://t.co/zpsBlVGjV9 pic.twitter.com/KfcTyEomxQ
— IBSF (@ibsf) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pankaj Advani defends his World #Billiards (150Up) title#Billiards #Mandalay #Myanmar #WorldBilliardsChampionship2019#WorldBilliardsChampionhttps://t.co/zpsBlVGjV9 pic.twitter.com/KfcTyEomxQ
— IBSF (@ibsf) September 15, 2019Pankaj Advani defends his World #Billiards (150Up) title#Billiards #Mandalay #Myanmar #WorldBilliardsChampionship2019#WorldBilliardsChampionhttps://t.co/zpsBlVGjV9 pic.twitter.com/KfcTyEomxQ
— IBSF (@ibsf) September 15, 2019
இதன்மூலம் பங்கஜ் அத்வானி இந்தியாவிற்காக 22ஆவது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
பங்கஜ் அத்வானி இந்தியாவிற்காக 2003ஆம் ஆண்டு முதல் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் பங்கேற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.