ETV Bharat / sports

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாது - பஜ்ரங் புனியா திட்டவட்டம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட முடியாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

Olympic athlete Bajrang Punia
Olympic athlete Bajrang Punia
author img

By

Published : Aug 24, 2021, 9:01 PM IST

நார்வேயில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் அண்மையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து பஜ்ரங் புனியா கூறுகையில், 'எனக்கு முழங்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக 6 வாரத்திற்கு உடற்பயிற்சி செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாது' எனத் தெரிவித்தார்.

பஜ்ரங் புனியாவின் பின்னணி

முன்னதாக ஹரியானா மாநிலம், சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த பஜ்ரங் புனியா, டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

அந்தத் தொடரில் பஜ்ரங் புனியா, அரையிறுதியில் தோல்வியை சந்தித்தப் பின்னர் நடைபெற்ற மறுவாய்ப்புப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் டவுலட் நியாஸ்பேகோவை (Daulet Niyazbekov) 8-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து மூன்றாவது இடம்பிடித்தார்.

இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.