ETV Bharat / sports

#PKL2019 : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி தபாங்ஸ்!

#PKL2019 புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தி, தபாங் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

#PKL2019 : Dabang Delhi beat Bengaluru Bulls
author img

By

Published : Oct 17, 2019, 2:58 PM IST

#PKL2019 புரோ கபடி லீக்கின் 7ஆவது சீசனின் முதல் அரையிறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்தது. இதில், நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின.

முதல் பாதியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான பவான் செரவாத்தின் வேகத்தைக் குறைக்க அவரை டேக்கிள் செய்வதிலேயே டெல்லி அணி கவனம் செலுத்தியது. இப்படி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது தபாங் டெல்லி அணி, பெங்களூரு அணியை 2 முறை ‘ஆல்-அவுட்’ செய்தது. இதனால் முதல் பாதி முடிவில் டெல்லி 26-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் டெல்லி வீரர்கள் சிறப்பாக விளையாடி, பெங்களூரு வீரர்களின் ஸ்டாடிக்ஸை தூளாக்கினர். இறுதியில் 44-38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி, தபாங் டெல்லி அணி இறுதிப் போட்டி முன்னேறியது.

ஏற்கனவே லீக் சுற்றுகளில் இரண்டு முறை பெங்களூரு அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

pro kabadi 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.