ETV Bharat / sports

ஆசிய விளையாட்டு போட்டி; 35 கி.மீ நடை ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் வென்று சாதனை! - 35 கிலோ மீட்டர் நடை ஓட்டம்

Asian Games: ஆசிய விளையாட்டுப் போட்டியில், 35 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் (race walk) இந்தியாவைச் சேர்ந்த மஞ்சுராணி மற்றும் ராம் பாபு ஆகியோர் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

Asian Games
ஆசிய விளையாட்டு போட்டி
author img

By PTI

Published : Oct 4, 2023, 9:53 AM IST

ஹாங்சோ (சீனா): ராணி மற்றும் பாபு ஆகிய இருவருமே ஆடவர் மற்றும் மகளிருக்கான பிரிவில் தேசிய அளவிலான சாதனையை பெற்றுள்ளனர். இருவரும் இணைந்து 5 மணி 51 நிமிடம் 14 விநாடிகளில் சீனா (5:16:41) மற்றும் ஜப்பானுக்கு (5:22:11) அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்று உள்ளனர். இந்த 35 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் பதக்கம் வென்றவர்களைத் தீர்மானிக்க இரு வீரர்களின் நேரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

  • 🥉BRONZE IN RACEWALK🥉

    🇮🇳 Athletes Ram Baboo and Manju Rani have secured a BRONZE MEDAL in the 35KM Racewalk (mixed team) with a combined timing of 5:51:14. at #AsianGames2022! 🏃🏻‍♀️🏃🏻

    Their journey has been one of sweat and sheer perseverance⚡💥 Let's cheer out loud for our… pic.twitter.com/lqPQkZy2aX

    — SAI Media (@Media_SAI) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 35 கிலோ மீட்டர் நடை ஓட்டம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விளையாட்டு 2024-இல் பாரிஸ்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடை ஓட்டப்போட்டி இந்தியாவில் இரு வருடங்களுக்கு முன்னர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

பாபு ஆண்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில் 2:42:11 மணி அளவில் நான்காவது இடத்தையும், பெண்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் ராணி 3:09:03 மணி அளவில் ஆறாவது இடத்தையும் பெற்று உள்ளனர். மேலும், பாபு இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆண்களுக்கான 35 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் 2:29:56 மணி அளவில் தேசிய சாதனையைக் கடந்தார்.

மேலும் கடந்த வருடம், நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 27வது இடத்தையும் அவர் பிடித்தார்.

ராணி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அளவில் நடைபெற்ற பெண்களுக்கான நடை ஓட்டத்தில் 2:57:54 மணி அளவில் தேசிய சாதனையை எட்டினார். மேலும், மாநில அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Asian Games 2023: ட்ரிப்பிள் ஜம்பில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.