சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரசால் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதுவரை இந்தியாவில் 694 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவவிடாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தனது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அசாம் மாநிலத்திற்கு வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், நண்பர்களே இந்த இக்கட்டான தருணத்தில் நாம் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டிய நேரம் இது.
அதனால், நான் எனது ஒரு மாத ஊதியத்தை அசாம் மாநிலத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விமான சேவை ரத்து; ஸ்பெயினில் தவிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை!