ஒகினவா கோஜிரியோ கராத்தே போட்டிகள் மலேசியாவின் நிப்போ சிட்டியில் நடைபெற்றது. இதில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, பூட்டான், நேபாளம், துருக்கி ஆகிய 7 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் இருந்து 200 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. தமிழ்நாட்டில் இருந்து கோவை மாநகர் சார்பில் 9 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 5 பேரும், சேலத்தில் இருந்து 9 மாணவர்களும் கலந்துகொண்டனர். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் கோவையைச் சேர்ந்த கைலாஷ், மாணவி மதுமிதா ஆகியோர் தங்கம் வென்றனர்.
அதேபோல், 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மாணவன் நந்தகுமார், 9 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் நந்தகுமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ராஜேஷ் மற்றும் யாதவ் என்ற மாணவர்கள் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.
இதில் 50 வயது உட்பட்டவர்களுக்கான போட்டியில் பார்த்திபன் என்பவரும் பதக்கங்களை வென்றார். இதேபோல் சேலத்தில் இருந்து பங்கேற்ற 13 பேரில் 7 பேர் தங்கமும், 3 பேர் வெள்ளியும், 3 பேர் வெண்கல பதக்கமும் வென்றனர். இவர்கள் அனைவரும் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். திருச்சி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.