கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 32ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், உட்பட பல்வேறு முக்கிய தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக டேபிள் டென்னிஸ் தொடரை ஒத்திவைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
-
Due to the continued uncertainty caused by #COVID19 and the postponement of the #Tokyo2020 Olympic and Paralympic Games, the ITTF Executive Committee reached the following decisions today 👉 https://t.co/3ovDVDfgeA pic.twitter.com/9Vstu8UZC5
— ITTF World (@ittfworld) March 29, 2020 \" class="align-text-top noRightClick twitterSection" data="
\">Due to the continued uncertainty caused by #COVID19 and the postponement of the #Tokyo2020 Olympic and Paralympic Games, the ITTF Executive Committee reached the following decisions today 👉 https://t.co/3ovDVDfgeA pic.twitter.com/9Vstu8UZC5
— ITTF World (@ittfworld) March 29, 2020
\Due to the continued uncertainty caused by #COVID19 and the postponement of the #Tokyo2020 Olympic and Paralympic Games, the ITTF Executive Committee reached the following decisions today 👉 https://t.co/3ovDVDfgeA pic.twitter.com/9Vstu8UZC5
— ITTF World (@ittfworld) March 29, 2020
இதையடுத்து ஐடிடிஎஃப் வெளியிட்ட அறிக்கையில், கோவிட்- 19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐடிடிஎஃப் செயற்குழு முடிவுகளை மேற்கொண்டுள்ளது. அதில் தற்போது நடைபெறவிருந்த அனைத்து தொடர்களையும் ஜூன் 30 ஆம் தேதிவரை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தோனி கிரிக்கெட்டுக்கு வந்தது எதற்காக? வாசிம் ஜாஃபர் பதில்