ETV Bharat / sports

பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் தேர்தல்: தேசிய அணி சஸ்பெண்ட் செய்யப்படும் என ஃபிஃபா எச்சரிக்கை! - fifa controversy

FIFA warns CBF: பிரேசில் கால்பந்து கூட்டமைப்பிற்கான தலைவர் தேர்தலில் அரசு அல்லது மூன்றாம் நபர் தலையீடு இருந்தால் பிரேசில் தேசிய மற்றும் கிளப் அணி சர்வதேச போட்டிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படும் என ஃபிஃபா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரேசில் கால்பந்து அமைப்பு ஜனாதிபதி தேர்தல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 1:00 PM IST

ரியோ டி ஜெனிரோ: ரியோ டி ஜெனிரோ நீதிமன்றம் பிரேசில் கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் ரோட்ரிகஸ் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தேர்தலில் முறைகேடு செய்ததாக கூறி நீக்கியது. இதனையடுத்து சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான ஃபிஃபா எங்களது அமைப்பில் அரசு மற்றும் மூன்றாம் தரப்பு தலையீட்டினை விரும்ப மாட்டோம் எனவும், இதனால் 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசில் அணியை முக்கிய போட்டிகளில் இருந்து நீக்கும் நிலை வரும் எனவும் கூறி நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துள்ளது.

மேலும் ஃபிஃபா அமைப்பு பிரேசில் கால்பந்தாட்ட அணியின் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பிரேசில் கால்பந்தாட்ட அமைப்பு எட்னால்டோ ரோட்ரிகஸை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தலை நடத்த முனைப்பு காட்டினால் ஃபிஃபா அமைப்பிலிருந்து இடைநீக்கத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபிஃபா மற்றும் தென் அமெரிக்கா கால்பந்தாட்ட அமைப்பு (CONMEBOL) ஜனவரி 8ஆம் தேதி பிரேசிலில் குழு அமைத்து இந்த விவகாரம் பற்றி விவாதிக்க போவதாக முடிவெடுத்துள்ளது. ஃபிஃபா மற்றும் தென் அமெரிக்கா கால்பந்தாட்ட அமைப்பு குழு அமைத்து விசாரிக்கும் வரை பிரேசில் கால்பந்தாட்ட அமைப்பை பாதிக்கும் எந்த முடிவும் எடுக்கப்படாது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரேசில் கால்பந்தாட்ட அமைப்பு நீக்கப்பட்டால் இடைநீக்கம் ரத்து செய்யும் வரை ஃபிஃபா அமைப்பில் பிரேசில் அணியின் உறுப்பினர் பதவி நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் பிரேசில் தேசிய அணி மற்றும் கிளப் அணி எந்த வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. பிரேசில் கால்பந்தாட்ட அணியின் தலைவர் ரோட்ரீகஸ் பதவி 2026 வரை உள்ளது. அதே நேரத்தில் பல சட்ட சிக்கல்களை சமீப காலமாக சந்தித்து வருகிறார்.

அவர் மீது எந்த வித ஊழல் குற்றசாட்டுகளும் இல்லாத பட்சத்திலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ரோட்ரீகஸுக்கு எதிராக செயல்படும் பிரேசில் கால்பந்து அமைப்புக்கு (CBF) 2027இல் பெண்கள் உலகக் கோப்பை நடத்துவதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ரியல் மேட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டியை தேசிய அணியின் பயிற்சியாளராக நியமிப்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிங்க: புறா சின்னத்தை பயன்படுத்திய கவாஜா.. தடை விதித்த ஐசிசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.