டெல்லி: கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெற்றது.
இத்தொடரின், நீளம் தாண்டுதல் போட்டியில் ஷைலி சிங் வெள்ளிப் பதக்கமும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும், 10,000 மீட்டர் நடை பந்தயத்தில் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் மூன்று பதக்கங்களுடன் இந்தியா 21ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வருங்கால வெற்றிக்கான அறிகுறி
இந்நிலையில், பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் உள்பட இத்தொடரில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், நாட்டுக்கு பதக்கங்களை குவித்து தந்திருக்கும் வீரர்களுக்கு பாராட்டுகள்.
-
Picking speed and success! Congratulations to our athletes for bringing home 2 Silver medals and a Bronze medal at @WAU20Nairobi21. Athletics is gaining popularity across India and this is a great sign for the times to come. Best wishes to our hardworking athletes.
— Narendra Modi (@narendramodi) August 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Picking speed and success! Congratulations to our athletes for bringing home 2 Silver medals and a Bronze medal at @WAU20Nairobi21. Athletics is gaining popularity across India and this is a great sign for the times to come. Best wishes to our hardworking athletes.
— Narendra Modi (@narendramodi) August 23, 2021Picking speed and success! Congratulations to our athletes for bringing home 2 Silver medals and a Bronze medal at @WAU20Nairobi21. Athletics is gaining popularity across India and this is a great sign for the times to come. Best wishes to our hardworking athletes.
— Narendra Modi (@narendramodi) August 23, 2021
தற்போது, இந்தியா முழுவதும் தடகளம் புகழ்பெற்று வருகிறது. வருங்கால வெற்றிகளுக்கு இது ஒரு நல்ல அறிகுறி. கடுமையாக உழைத்த வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதுவரை இந்தியா
இதற்கு முந்தைய ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியா இதுவரை நான்கு பதக்கங்களையே பெற்றுள்ளது. வட்டு எறிதலில் சீமா அன்தில் (2002), நவ்ஜோத் கவுர் திலோன் (2014) ஆகியோர் வெண்கலமும், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா (2016) தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ் (2018) தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர்.
இந்த தொடரில், ஷைலி சிங் ஒரு செ.மீட்டர் வித்தியாசத்தில் தங்கத்தை தவறவிட்டுள்ளார். தங்கம் வென்றிருந்தால் இந்தியா 15ஆவது இடத்தோடு இத்தொடரை நிறைவு அடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஷைலி சிங்
உத்தரப்பிரதேச மாநில ஜான்சியை சேர்ந்த ஷைலி சிங் (17). அவரின் தாயார் டெய்லராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது, ஷைலி சிங் பெங்களூருவில் உள்ள அஞ்சு பாபி ஜார்ஜின் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்று வருகிறார். மேலும், அஞ்சு பாபியின் கணவரான ராபர்ட் பாபி ஜார்ஜ் தான் ஷைலி சிங்கின் பயிற்சியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளி வென்ற ஷைலி சிங்குக்கு பாராட்டு தெரிவித்த அனுராக் தாக்கூர்!