இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனில் இன்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் கோவா எஃப்.சி. - பெங்களூரு எஃப்.சி. அணிகள் மோதின. முன்னதாக இந்த இரு அணிகளும் கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. அப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
எனவே அதற்கு தனது சொந்த மண்ணில் வைத்தே பெங்களூருவை இன்றையப் போட்டியில் கோவா அணி பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனிடையே, கோவா ஜவர்ஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதினர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிவடைந்தது.
பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அதே நிலை நீடித்த நிலையில் பெங்களூரு வீரர் உடான்ட்டா சிங் 62ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதிவரை கோவா அணி வீரர்கள் கோல் அடிக்காமல் இருந்ததால் கோவா அணி தோல்வியைத் தழுவும் நிலை உருவானது. பின்னர் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் கோவா வீரர் பெர்ரன் கோரோமினாஸ் பெனால்டி முறையில் கோல் அடித்து போட்டியை டிரா செய்ய உதவினார்.
-
Last season's #HeroISL finalists share the spoils in Goa 🤝#GOABEN #LetsFootball #TrueLove pic.twitter.com/y4AcnnpR5g
— Indian Super League (@IndSuperLeague) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Last season's #HeroISL finalists share the spoils in Goa 🤝#GOABEN #LetsFootball #TrueLove pic.twitter.com/y4AcnnpR5g
— Indian Super League (@IndSuperLeague) October 28, 2019Last season's #HeroISL finalists share the spoils in Goa 🤝#GOABEN #LetsFootball #TrueLove pic.twitter.com/y4AcnnpR5g
— Indian Super League (@IndSuperLeague) October 28, 2019
இதனால் இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதன்மூலம் கோவா அணி நான்கு புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.