ETV Bharat / sports

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பானர்ஜி காலமானார் - முன்னாள் கேப்டன் பிரதீப் குமார் பானர்ஜி

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரதீப் குமார் பானர்ஜி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Indian football legend PK Banerjee dies at 83

author img

By

Published : Mar 21, 2020, 11:49 AM IST

இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் பானர்ஜி. தனது 16 வயதிலேயே சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுகமான இவர், 1955 முதல் 1967ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

மேலும், 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்லவும் முக்கியப் பங்கு வகித்தார். அதன்பின் 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அங்கம் வகித்தவர். பின் 1960ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடருக்கான இந்திய கால்பந்து அணியின் கேப்டனாவும் செயல்பட்டார்.

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரதீப் குமார் பானர்ஜி

மேலும் 1961ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பாக விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதையும்,1990ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது மிகப்பெரும் விருதான பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

இதுவரை 84 சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற பானர்ஜி 68 கோல்களை அடித்துள்ளார். இதற்காக 2004ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் ஆர்டர் ஆஃப் மெரிட் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மார்ச் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 83 வயதான பானர்ஜி, சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவுக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சச்சின் டெண்டுல்கர், மனோஜ் திவாரி, முகமது கைஃப் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

  • Heartfelt condolences on the passing of the great Indian footballer PK Banerjee!

    Have fond memories of meeting him on a few occasions and the positivity he spread.

    May his soul Rest In Peace!🙏🏼 pic.twitter.com/NqXO2A91wc

    — Sachin Tendulkar (@sachin_rt) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • I would like to offer my heartfelt condolences to the family of Mr. PK Banerjee as well as to the entire Indian football fraternity.
    He was a pioneer in every sense of the word, and his achievements will forever have a place in Indian footballing history. Rest in peace.

    — Sunil Chhetri (@chetrisunil11) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • My Words cannot fully express the sorrow We feel after learning about the death of our legendary footballer⚽️#PKBanerjee May u ever treasure d wonderful times u had and my prayers r wit ur whole family🙏 RIP Sir pic.twitter.com/8t5I7yQGBO

    — MANOJ TIWARY (@tiwarymanoj) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: உரிமையாளர்களுடன் இணைந்து முடிவெடுக்க பிசிசிஐ திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.