ETV Bharat / sports

பார்சிலோனாவுக்கு அதிர்ச்சியளித்த கெட்டாஃப்! - பார்சிலோனா எஃப்சி

லாலிகா கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கெட்டாஃப் அணி 1-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

Getafe hand Barcelona shocking 1-0 defeat

author img

By

Published : Oct 18, 2020, 12:40 PM IST

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் பிரபல கால்பந்து தொடரான லாலிகா தொடரின் நடப்பு சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் இன்று (அக்.18) நடைபெற்ற லீக் போட்டியில் பார்சிலோனா எஃப்சி அணி, கெட்டாஃப் எஃப்சி அணியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் முதல் பாதி ஆட்டம் நேர முடிவு வரை இரு அணியாலும் கோலடிக்க இயலவில்லை. இதனால் கோலேதுமின்றி முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணியும் சமபலத்துடன் மோதியதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பின்னர் ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்திக் கெட்டாஃப் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஜெய்மி மாடா (Jaime Mata) அதனை கோலாக மாற்றி அசத்தினர். பின்னர் பார்சிலோனா அணி இறுதி வரை போராடி கோலடிக்க முயற்சித்தது. ஆனால் அவர்களின் முயற்சிகளை கெட்டாஃப் அணி டிஃபென்டர்கள் முறியடித்து அசத்தினர்.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் கெட்டாஃப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் கெட்டாஃப் அணி லாலிகா புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறிவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஷாய் ஹோப்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.