ஸ்பெயினில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நடப்பு சீசனுக்கான 'லா லிகா' தொடர் வரும் ஜூன் 11 முதல் தொடங்க உள்ளன.
இதற்காக அனைத்து லா லிகா கால்பந்து கிளப் அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் கரோனா வைரஸ் தலைதூக்கி இருந்த சமயத்தில், பார்சிலோனா வீரர்கள் 5 பேருக்கும் பயிற்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த இருவருக்கும் கரோனா வைரஸ் தாக்கியதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆனால், பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த நபர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து வீரர்களும் மற்றும் இரண்டு பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்தவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
வரும் ஜூன் 13ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி ரியல் மாலோர்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது.