இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அணி வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்கள் என 1,575 பேருக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோனையின் முடிவில், வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த எட்டு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இத்தகவலை இங்கிலீஷ் பிரீமியர் லீக் கூட்டமைப்பும் உறுதி செய்துள்ளது.
இது குறித்து இபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 18 ஆகிய தேதிகளில் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடிவரும் அணியின் வீரர்கள், அணி ஊழியர்கள் என 1,575 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையின் முடிவில் மேலும் எட்டு வீரர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பிரீமியர் லீக் தொடரில் நடத்தப்பட்ட ஏழு முறை கரோனா கண்டறிதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தினேஷ் கார்த்திக் பதவியை மோர்கனிடம் கொடுத்தது தவறான முடிவு: அகர்கர்