ETV Bharat / sports

T20 ஆசிய மகளிர் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா

T20 ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டாபர் 7 ஆம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா தனது லீக் ஆட்டத்தில் மோதுகிறது.

T20 மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள இந்தியா

author img

By

Published : Sep 21, 2022, 6:52 AM IST

T20 ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வங்கதேசத்தின் ஷைலட் பகுதியில் நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து மற்றும் மலேசியா என 7 நாடுகள் பங்கேற்கிறது.

ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், அங்கு மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்கவில்லை. ஹர்மன்பிரீத் கவுரை தலைமையாகக் கொண்டு களமிறங்கும் இந்திய அணி மொத்தம் ஆறு லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்நிலையில் T20 ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். அதில்,

  1. அக்டோபர் 1 - இந்தியா Vs இலங்கை
  2. அக்டோபர் 3 - இந்தியா Vs மலேசியா
  3. அக்டோபர் 4 - இந்தியா Vs ஐக்கிய அரபு அமீரகம்
  4. அக்டோபர் 7 - இந்தியா Vs பாகிஸ்தான்
  5. அக்டோபர் 8 - இந்தியா Vs வங்கதேசம்
  6. அக்டோபர் 10 - இந்தியா Vs தாய்லாந்து

இதில் தகுதி பெறும் முதல் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இதன் அரையிறுதி போட்டிகள் 11 அல்லது 13 ஆம் தேதியிலும், இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுமா... பயிற்சியாளரை மாற்றிய பஞ்சாப் கிங்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.