ETV Bharat / sports

உலக சாம்பியனுக்கு நேர்ந்த கதி! வீழ்ச்சியில் இருந்து மீளுமா இங்கிலாந்து?

2019ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தடுமாறி வருகிறது. இனி வரும் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 4:14 PM IST

England
England

ஐதராபாத் : உலக சாம்பியனான, நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை பவுண்டரி வித்தியாசத்தில் வீழத்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி வெற்றிக்காக கடுமையாக போராடி வருகிறது. விளையாடிய 4 ஆட்டங்களில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்து உள்ளது. வெறும் இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இங்கிலாந்து அணி இடம் பெற்று உள்ளது.

நடப்பு சாம்பியனுக்கு நடந்த பரிதாபம் என்று கூறினாலும் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து அணியின் விளையாட்டு பரிதாபகர நிலையில் உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வெளிவந்த கருத்து கணிப்பில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணி நடப்பு தொடரில் மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கும் என்றும் கோப்பையை தக்கவைக்கும் நிலையில் உள்ளது என்றும் கணிக்கப்பட்டது.

நடப்பு தொடரில் மூன்று தோல்விகளை சந்தித்து உள்ள இங்கிலந்து அணியின் அரைஇறுதி கனவு ஏறக்குறை சிக்கலுக்கு உள்ளாகி உள்ளாது. இனி வரும் ஆட்டங்களில் எல்லாம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்புக்காக மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து பேட்ஸ்மேன் பிரன்டன் மெக்குலம் நியமிக்கப்பட்டதில் இருந்து அந்த அணி வீரர்கள் பாஸ்பால் (Bazball) யுக்தியை கையாண்டு வருகின்றனர். அதாவது தடுப்பாட்டடத்தில் அதிவிரைவில் ரன்கள் குவிப்பது என்பது தான். இந்த யுக்தியை டெஸ்ட் கிரிக்கெட்டில் கையாண்ட இங்கிலாந்து வீரர்கள் வெற்றிகளை வாரி குவித்தனர்.

தற்போதை உலக கோப்பை இங்கிலாந்து அணியில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் பிரன்டன் மெக்குலத்தின் பாஸ்பால் (Bazball) யுக்திக்கு பழக்கப்பட்டவர்கள். அதன் காரணமாகவே அவசரகதியாக இங்கிலாந்து வீரர்கள் சில தவறான ஷாட்டுகளை அடித்து ஆட்டமிழப்பதும் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் ஜோடி 115 ரன்களை குவித்தது. மற்ற ஆட்டங்களில் 50 ரன் பார்ட்னர்ஷிப் கூட சேர்க்க முடியாமல் தவறி வருகிறது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணியாக இருந்த நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

காயம் காரணமாக முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கினார். அந்த ஆட்டத்திலும் 5 ரன்களில் அவர் வெளியேற்றப்பட்டார். அதுவும் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இங்கிலாந்து எதிர்கொள்ள உள்ள அடுத்த 5 ஆட்டங்களில் பென் ஸ்டோக்ஸ் பெரிய அளவில் கோலோச்சுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இங்கிலாந்து அணியில் பந்துவீச்சு மோசமாக உள்ளது. கடந்த 4 ஆட்டங்களில் மட்டும் இங்கிலாந்து வீரர்கள் ஆயிரத்து 193 ரன்களை வாரி வழங்கி உள்ளனர். இனி வரும் ஐந்து ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இங்கிலாந்து அணி வரும் 26ஆம் தேதி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க : கேரளாவில் லோகேஷை சூழ்ந்த ரசிகர்கள்.. காலில் காயம்... போலீசார் லத்தி சார்ஜ்.. என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.