லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று (ஆக. 25) தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (ஆக. 26) நடைபெற்று வருகிறது.
8 ஓவர்களில், 5 மெய்டன்
நேற்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால், இந்திய அணி 78 ரன்களில் ஆல்- அவுட்டானது. குறிப்பாக, புது பந்தில் (New ball) ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ஓவர்களை வீசி வெறும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதில், ஐந்து ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Two batting greats born 15 years apart, both pushed to their limits by the same fast-bowler.
— ICC (@ICC) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
That is the longevity of James Anderson 👇#ENGvIND #WTC23https://t.co/pL7IrUqzey
">Two batting greats born 15 years apart, both pushed to their limits by the same fast-bowler.
— ICC (@ICC) August 26, 2021
That is the longevity of James Anderson 👇#ENGvIND #WTC23https://t.co/pL7IrUqzeyTwo batting greats born 15 years apart, both pushed to their limits by the same fast-bowler.
— ICC (@ICC) August 26, 2021
That is the longevity of James Anderson 👇#ENGvIND #WTC23https://t.co/pL7IrUqzey
இந்நிலையில், நேற்றைய முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு, ஆண்டர்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனது வயதின் காரணமாக தற்போது எல்லாம் உடற்பயிற்சி கூடத்தில் அதிக நேரம் செலவிடுகிறேன். மேலும், வலைப்பயிற்சியில் குறைவாகப் பந்துவீசி, போட்டியில் முழுமையான திறனை வெளிக்காட்டி வருகிறேன்.
எனக்கு சிரமமில்லை
டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய சோதனை என்னவென்றால் நீண்ட ஸ்பெல்களை போட, நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பந்துவீசும் போது முழு கவனத்தையும் செலுத்திவிட்டு, அதை விட்டு வெளியே வந்தவுடன் நிதானமாகவும் உங்களை மாற்றிக்கொள்வதுதான் மிகவும் சிரமமானது. ஆனால், அது ஆரம்பத்தில் இருந்தே எனக்கு கைவரப்பெற்றதால், அது எனக்கு பெரும் சிரமமாகத் தெரியவில்லை" என்றார்.
மேலும், கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி என முக்கிய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்த அவர், இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் எனக்கு பெரும் சவாலை அளித்துள்ளது என்றார்.
39 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன், 165 டெஸ்ட் போட்டிகளில் (306 இன்னிங்ஸ்) விளையாடி 629 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் அரங்கில் முரளிதரன் (800), ஷேர்ன் வார்னே (706) ஆகியோருக்கு அடுத்து, அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சளார் பட்டியலில் முதல் இடத்திலும் ஆண்டர்சன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tokyo Paralympics: தென் கொரிய வீராங்கனையிடம் வீழ்ந்தார் சோனல்பென் படேல்