ETV Bharat / sports

IND vs SA: 2ஆவது டி20 - மீளுமா இளம் இந்திய அணி - இந்தியா தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கட்டக் பாராபதி மைதானத்தில் இன்று (ஜுன் 12) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

IND vs SA
IND vs SA
author img

By

Published : Jun 12, 2022, 2:01 PM IST

கட்டக்: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாராபதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பயிற்சியின்போது காயம் காரணமாக கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் இருவரும் தொடரிலிருந்து விலகினர். இதனால், கேப்டனாக ரிஷப் பந்தும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டார்.

முதல் போட்டியில் 211 ரன்கள் எடுத்தாலும், மோசமான பந்துவீச்சினால் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனவே, இன்றைய போட்டியில் அக்சர் படேலுக்கு அர்ஷ்தீப் சிங் அல்லது உம்ரான் மாலிக் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.

கடந்த போட்டியில் களம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தாலும், தென்னாப்பிரிக்கா அணி பேட்டர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்தான் அந்த அணி அபார வெற்றியை அடைந்தது.

மேலும், ரஸ்ஸி வேன் டர் டஸ்ஸன், டேவிட் மில்லர் போன்றோர் மிரட்டலான ஃபார்ம் இத்தொடரிலும் தொடர்கிறது. எனவே, இன்றைய போட்டி குறித்து அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: ரஞ்சி கிரிக்கெட்: 92 வருட உலக சாதனையை முறியடித்த மும்பை அணி! 725 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.