ETV Bharat / sports

CSK Vs LSG: லக்னோவுடன் மோதும் 'மஞ்சள் படை' - வெற்றிப் பாதைக்கு திரும்புமா? - பஞ்சாப் மும்பை அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லக்னோ அணியை கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய சென்னை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Today IPL match
இன்றைய ஐபிஎல் ஆட்டம்
author img

By

Published : May 3, 2023, 2:22 PM IST

ஹைதராபாத்: நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 5 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று (மே 3) நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது.

பேட்டிங் ஆறுதல்: பேட்டிங்கில் கெய்க்வாட், கான்வே, ரஹானே, ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனர். இதேபோல் கடைசி நேரத்தில் களம் இறங்கும் கேப்டன் தோனி, அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் விளையாடுவது கூடுதல் பிளஸ். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 9 போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்தியிருந்தாலும், பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 49 ரன்களை விட்டுக் கொடுத்தார். எனவே அவர் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆகாஷ் சிங், பதிரானாவும் சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசுவது அவசியம். ஏற்கனவே கடந்த 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற போராடும் என நம்பலாம்.

KL Rahul Wound - Unadkat Ruled out
கே.எல்.ராகுல் காயம் - உனத்கட் விலகல்

ராகுல் சந்தேகம்: லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் அவதியடைந்து வருகிறார். அவர் இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என்பது சந்தேகம் தான். ராகுலுக்கு பதிலாக க்ருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. கே.எல்.ராகுலுக்கு பதிலாக குயின்டான் டி காக் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஸ்டொய்னிஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். தீபக் ஹூடா ஃபார்மை இழந்து தவிக்கிறார்.

பந்துவீச்சில் நவீன்-உல்-ஹக், ரவி பீஷ்னோய், அமித் மிஸ்ரா வலுசேர்க்கின்றனர். பெங்களூரு அணியுடான கடந்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்த லக்னோ அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

உனத்கட் விலகல்: இந்நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன் அவர் காயத்தில் இருந்து மீண்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோவில் ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதும் 45வது லீக் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்குகிறது.

லக்னோ உத்தேச அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்)/ குயின்டான் டி காக், ஸ்டொய்னிஸ், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்ட்யா, கே.கவுதம், நிகோலஸ் பூரன், ரவி பீஷ்னோய், அமித் மிஸ்ரா, நவீன்-உல்-ஹக்.

சென்னை உத்தேச அணி: கெய்க்வாட், கான்வே, அம்பதி ராயுடு, ரஹானே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தோனி (கேப்டன்), துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரானா, தீக்சனா.

Mumbai vs Punjab
மும்பை vs பஞ்சாப்

மற்றொரு ஆட்டம்: இந்நிலையில் இன்று நடைபெறும் 46வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட மும்பை அணி, 213 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. அதே உத்வேகத்துடன் மும்பை அணி இன்று களம் இறங்குகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, இஷாந்த் கிஷன் அதிரடியாக விளையாடினால், நல்ல ஸ்கோரை எட்ட முடியும். கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர்.

இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டியில் அவர் களம் இறக்கப்படுவாரா என்பது சந்தேகம் தான். பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, மெரிடித் முழு திறனை வெளிப்படுத்தினால், பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தலாம். பஞ்சாப் அணியின் இடது கை பேட்ஸ்மேன்கள் தவான், தைடே, சாம் கரனுக்கு நெருக்கடி கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் ஹிருத்திக் ஷோகீனை மும்பை அணி களம் இறக்க வாய்ப்புள்ளது.

பஞ்சாப் அணி, சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்க உள்ளது. பிரப்சிம்ரன் சிங், கேப்டன் தவான், லிவிங்ஸ்டோன் பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். அர்ஷ்தீப் சிங், ரபாடா, சாம் கரன் ஆகியோரின் வேகம், மும்பை அணிக்கு முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளது.

போட்டி எங்கே?: மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, மொகாலியில் நடைபெறுகிறது.

பஞ்சாப் உத்தேச அணி: பிரப்சிம்ரன் சிங், தவான் (கேப்டன்), தைடே, லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேகல் வதேரா, பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோகீன்/குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், பெஹ்ரன்டார்ஃப், அர்ஷத் கான்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.