ஐபிஎல் தொடரில் நேற்று (மே. 25) நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்தது.
208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், டி காக் களமிறங்கினர். டி காக் இந்த போட்டியில் 5 பந்துகளில் 6 ரன்கள் அடித்து சிராஜ் வீசிய முதல் ஓவரில் அவுட்டானார்.
அதன்பிறகு வந்த மனன் வோஹ்ரா 11 பந்துகளில் 19 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கேஎல் ராகுலுடன் இணைந்த தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லக்னோ அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் கேஎல் ராகுல் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹசரங்கா வீசிய 15 ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து தீபக் ஹூடா கீளீன் போல்டானார். ஒரு கட்டத்தில் 16 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டோய்னிஸ் 9 ரன்களில் வெளியேறினார்.
லக்னோ அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவை இருக்க பெங்களூர் அணியிலிருந்து ஹசல்வுட் வீச வந்தார். ஹசல்வுட் தொடர்ந்து மூன்று பந்துகள் வைட் வீச, அடுத்த பந்தே பொறுமை காட்டிய ராகுல், ஷாபாஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து 79 ரன்களில் வெளியேறினார். குர்னால் பாண்டியாவும் தான் சந்தித்த முதல் பந்தே அவுட்டானார்.
6 பந்துக்கு 24 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் லீவிஸ் ஹர்ஷல் பட்டேல் பந்தை சந்தித்து முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்து டாட், அதுக்கு அடுத்த பந்தில் சமீரா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். அடுத்தடுத்த 2 பந்துகளை ஹர்ஷல் பட்டேல் டாட் வீச பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IPL 2022 Qualifier 1: லாஸ்ட் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்... மில்லரின் அதிரடி, பைனலில் குஜராத்!