ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப்ரல் 2) 9ஆவது லீக் ஆட்டம் மும்பையின் டிஒய் படில் மைதானத்தில் பிற்பகல் 03.30 மணிக்கு தொடங்கியது.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலபரீட்சை நடத்திவருகின்றன. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தனர்.
அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 68 பந்துகளுக்கு 100 ரன்களை எடுத்து அசத்தினார். அதேபோல கேப்டன் சஞ்சு சாம்சன் 21 பந்துகளுக்கு 30 ரன்களையும், ஷிம்ரோன் ஹெட்மியர் 14 பந்துகளுக்கு 35 ரன்களையும் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். மறுபுறம் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அந்த வகையில் 194 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: GT vs DC: 10 லீக் ஆட்டம் குஜராத் vs டெல்லி