நவி மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 12) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஹர்திக் ஆறுதல்: இதன்மூலம், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 ரன்களை ஹைதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. குஜராத் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் 50 (42), அபினவ் மனோகர் 35 (21) ரன்களை எடுத்தனர். ஹைதராபாத் தரப்பில் நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
-
Our Top Performer from the second innings is Kane Williamson for his excellent knock of 57.
— IndianPremierLeague (@IPL) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A look at his batting summary here 👇👇 #TATAIPL #SRHvGT pic.twitter.com/YCra3oCkQl
">Our Top Performer from the second innings is Kane Williamson for his excellent knock of 57.
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL #SRHvGT pic.twitter.com/YCra3oCkQlOur Top Performer from the second innings is Kane Williamson for his excellent knock of 57.
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL #SRHvGT pic.twitter.com/YCra3oCkQl
வலுவான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்: இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு வில்லியம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி வலுவான தொடக்கத்தை அளித்தது. அபிஷேக் 42 (32) ரன்களிலும், வில்லியம்சன் 57 (46) ரன்களில் வெளியேறினாலும், இறுதி ஓவர்களில் பூரன் காட்டிய அதிரடி, வெற்றியை மிக எளிமையாக அணிக்கு பெற்றுத்தந்தது.
2ஆவது வெற்றி: 19.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டிய ஹைதராபாத், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள குஜராத் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்றிருந்த நிலையில், இது அந்த அணிக்கு முதல் தோல்வியாகும்.
முன்னேறும் எஸ்ஆர்ஹெச்: 46 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 57 ரன்களை குவித்த் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வானார். புள்ளிப்பட்டியலில், தோல்வியடைந்த குஜராத் அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 1 தோல்வி) 5ஆவது இடத்திலும், ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 தோல்வி) 8ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜா vs டூ பிளேசிஸ்: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப். 12) நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி, நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க: அஸ்வின், பாதியில் வெளியேறியது சரியான தருணம்- சங்கக்கரா