மும்பை: 15ஆவது ஐபிஎல் சீசனின் 16ஆவது லீக் போட்டியில் மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று (ஏப். 8) மோதின. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
புரட்டி எடுத்த லிவிங்ஸ்டன்: இதன்மூலம், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 64 (27) ரன்களையும், ஷிகர் தவான் 35 (30) ரன்களையும் எடுத்தனர். குஜராத் பந்துவீச்சில் ரஷித் கான் 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து (எகானமி: 5.50) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாய் சுதர்சன் 'DEBUT': 190 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு, கில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். மற்றொரு ஓப்பனரான மாத்யூ வேட் 6 (7) ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் மூன்றாவது வீரராக களமிறங்கினார்.
101 ரன்கள் பார்ட்னர்ஷிப்: கில் - சுதர்சன் ஜோடி, பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்தது. சுதர்சன் சீராக ரன்களை சேர்க்க, கில் அதிரடி காட்டி வந்தார். இந்த ஜோடி 101 ரன்களை சேர்த்த போது, 14.4 ஓவரில் ராகுல் சஹாரிடம் சுதர்சன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 35 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கில் 96: அடுத்து வந்த கேப்டன் பாண்டியா, கில்-க்கு உறுதுணையாக இருந்து ரன்களை சேர்ந்தார். அப்போது, கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரபாடா வீசிய 19ஆவது ஓவரில் பாண்டியா 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இருப்பினும், அந்த ஓவரின் 5ஆவது பந்தில் கில் 96 (59) ரன்களுக்கு கேப்டன் அகர்வால் கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சதத்தை தவறவிட்ட அவர் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்திருந்தார்.
பாண்டியா பரிதாபம்: இதைத் தொடர்ந்து, கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை ஓடியன் ஸ்மித் வீச வந்தார். முதல் பந்திலேயே கேப்டன் பண்டியா ரன்-அவட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவர் 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து, 3ஆவது, 4ஆவது பந்தில் மில்லர் முறையே பவுண்டரி, ஒரு ரன் எடுக்க கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டன. ராகுல் திவாட்டியா ஸ்ட்ரைக்கில் இருந்தார்.
-
𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗙𝗜𝗡𝗜𝗦𝗛! 👌 👌@rahultewatia02 creams two successive SIXES on the last two deliveries as the @hardikpandya7-led @gujarat_titans beat #PBKS & complete a hat-trick of wins in the #TATAIPL 2022! 👏 👏 #PBKSvGT
— IndianPremierLeague (@IPL) April 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/GJN6Rf8GKJ pic.twitter.com/ke0A1VAf41
">𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗙𝗜𝗡𝗜𝗦𝗛! 👌 👌@rahultewatia02 creams two successive SIXES on the last two deliveries as the @hardikpandya7-led @gujarat_titans beat #PBKS & complete a hat-trick of wins in the #TATAIPL 2022! 👏 👏 #PBKSvGT
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
Scorecard ▶️ https://t.co/GJN6Rf8GKJ pic.twitter.com/ke0A1VAf41𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗙𝗜𝗡𝗜𝗦𝗛! 👌 👌@rahultewatia02 creams two successive SIXES on the last two deliveries as the @hardikpandya7-led @gujarat_titans beat #PBKS & complete a hat-trick of wins in the #TATAIPL 2022! 👏 👏 #PBKSvGT
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
Scorecard ▶️ https://t.co/GJN6Rf8GKJ pic.twitter.com/ke0A1VAf41
ஓடியனை ஓடவிட்ட திவாட்டியா: இந்நிலையில், ஓடியன் ஸ்மித்தின் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு திவாட்டியா பஞ்சாபின் வெற்றியை பறித்தார். இதன்மூலம், குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, தனது 3ஆவது வெற்றி பதிவுசெய்தது.
2ஆவது இடத்தில் டைட்டன்ஸ்: பஞ்சாப் சார்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், ராகுல் சஹார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 6 ரன்களை குவித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வானார். புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி) 2ஆவது இடத்திலும், பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 தோல்வி) 6ஆவது இடத்திலும் உள்ளன.
-
For his incredible 96 (59) at the top, @ShubmanGill is adjudged as the Player of the Match as @gujarat_titans win by 6 wickets in a final-over thriller. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/GJN6Rf8GKJ#TATAIPL | #PBKSvGT pic.twitter.com/9M7pAzMpqA
">For his incredible 96 (59) at the top, @ShubmanGill is adjudged as the Player of the Match as @gujarat_titans win by 6 wickets in a final-over thriller. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
Scorecard ▶️ https://t.co/GJN6Rf8GKJ#TATAIPL | #PBKSvGT pic.twitter.com/9M7pAzMpqAFor his incredible 96 (59) at the top, @ShubmanGill is adjudged as the Player of the Match as @gujarat_titans win by 6 wickets in a final-over thriller. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
Scorecard ▶️ https://t.co/GJN6Rf8GKJ#TATAIPL | #PBKSvGT pic.twitter.com/9M7pAzMpqA
இன்றைய போட்டிகள்: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப். 9) இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மாலை 3.30 மணிக்கு சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஓய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரவு 7.30 மணிக்கு புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் போட்டியில், பெங்களூரு - மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளும் இத்தொடரில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. எனவே, யார் யார் தங்களின் முதல் புள்ளிகளை பெற போகிறார்கள் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.