அபுதாபி: கரோனா தொற்று பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள், கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. நேற்று (செப். 28) 42ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மும்பை அணிக்கு 136 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஓப்பனிங்கை உடைத்த பீஷ்னாய்
இதையடுத்து, ரோஹித் சர்மா, குவின்டன் டி காக் ஆகியோர் மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பீஷ்னாய் வீசிய நான்காவது ஓவரில் ரோஹித் 8, சூர்யகுமார் 0 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், சௌரப் திவாரி உடன் இணைந்து டி காக் ரன்களை சேர்த்து வந்தார். ஷமி வீசிய 10ஆவது ஓவரில் டி காக் 27 (29) ரன்களில் போல்டானார்.
-
This is what the Points Table looks like after Match 42 of #VIVOIPL. 🔽 #MIvPBKS pic.twitter.com/JGWUyjqXbW
— IndianPremierLeague (@IPL) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is what the Points Table looks like after Match 42 of #VIVOIPL. 🔽 #MIvPBKS pic.twitter.com/JGWUyjqXbW
— IndianPremierLeague (@IPL) September 28, 2021This is what the Points Table looks like after Match 42 of #VIVOIPL. 🔽 #MIvPBKS pic.twitter.com/JGWUyjqXbW
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
5ஆவது இடத்தில் மும்பை
அடுத்து களமிறங்கிய ஹர்திக் விரைவாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திவாரி 45 (37) ரன்களில் எல்லீஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். இருப்பினும், பொல்லார்ட் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால், மும்பை அணி 19 ஓவர்களில் , 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதன்மூலம், மும்பை அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, பஞ்சாப் அணியை ஆறாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
மும்பை அணியில் ஹர்திக் 40 (30), பொல்லார்ட் 15 (7) ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சு தரப்பில் பீஷ்னாய் 2 விக்கெட்டுகளையும், ஷமி, எல்லீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
-
Kieron Pollard made his presence felt with 2 wickets & vital 15* & bagged the Man of the Match award as @mipaltan returned to winning ways. 👏 👏#VIVOIPL #MIvPBKS
— IndianPremierLeague (@IPL) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/R0IbccS6YD
">Kieron Pollard made his presence felt with 2 wickets & vital 15* & bagged the Man of the Match award as @mipaltan returned to winning ways. 👏 👏#VIVOIPL #MIvPBKS
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Scorecard 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/R0IbccS6YDKieron Pollard made his presence felt with 2 wickets & vital 15* & bagged the Man of the Match award as @mipaltan returned to winning ways. 👏 👏#VIVOIPL #MIvPBKS
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Scorecard 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/R0IbccS6YD
ஆர்ஆர் vs ஆர்சிபி
மேலும், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று (செப். 29) நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க: IPL 2021: டெல்லியை டம்மி ஆக்கிய கொல்கத்தா!