ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விருந்து படைத்து வருகிறது. இத்தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 167 ரன்களை எடுத்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 157 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய சேவாக், "கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே எளிதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஜாதவ் - ஜடேஜா இணை பந்துகளை வீண் அடித்து அணியை தோல்விக்கு அழைத்து சென்றனர்.
என்னுடைய பார்வையில், சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் விளையாடுகிறார்களோ இல்லையோ, எப்படியும் சம்பளம் வந்துவிடும் என நினைக்கின்றனர்" என தெரிவித்துள்ளார். ஏனெனில் நடப்பு சீசனில் சென்னை அணி பங்கேற்ற ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் அணியில் சரியான நடுவரிசை வீரர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளை ரசிகர்களும் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘கை இல்லாட்டி என்னங்க மனசுல சாதிக்க தைரியம் இருக்கு’ மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்