ஐபிஎல் தொடரில் இன்று (அக்.11) நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
நடப்பு சீசனின் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அஜிங்கே ரஹானே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, ஹர்சல் பட்டேல், ககிசோ ரபாடா.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
இதையும் படிங்க: சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன - கேப்டன் தோனி