அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் (யூஏஇ) ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்ட பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. இதையடுத்து 224 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கய ராஜஸ்தான் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. முன்னணி பந்துவீச்சாளரான முகம்மது சமியும் சோபிக்கவில்லை. இந்நிலையில் ஷேக் ஸாயித் மைதானத்தில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தமட்டில் அந்த அணி பேட்டிங்கில் அசுர பலத்துடன் காணப்படுகிறது. ஜாஸ்பீரீத் பும்ரா போன்ற அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் உள்ளனர். இவர் தவிர மிடில் ஆர்டர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களும் முழு பலத்துடன் உள்ளனர். எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் பஞ்சாப்பும் புத்துயிர் பெற்றுள்ளது.
இதுவரை இரு அணிகளும் 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 13இல் மும்பையும், 11இல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளுக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் அனல் பறக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
வீரர்கள்:
மும்பை இந்தியர்கள்: ரோகித் சர்மா (கேப்டன்), பிரின்ஸ் பல்வந்த் ராய், குவின்டன் டி காக், ராகுல் சகர், சௌரப் திவாரி, செர்பேன் ரூதர்போர்ஃடு, சூர்யகுமார் யாதவ், ட்ரென்ட் போல்ட், ஆதித்ய தரே, அன்மோல்ப்ரீத் சிங், அங்கூல் ராய், கிறிஸ் லயன், தவால் குல்கர்னி, திக்விஜய் தேஷ்முக், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷான், ஜேம்ஸ் பட்டின்சன், ஜாஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரென் பொல்லார்டு, குர்ணால் பாண்ட்யா, மிட்செல் மெக்லெனன், மோஷின் கான், நாதன் கோல்டர் நீல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல் (கேப்டன்), கிருஷ்ணப்பா கௌதம், ஹர்பீரித் பிரார், தீபக் ஹூடா,கிரிஸ் ஜோர்டான், சர்பராஸ் கான், மன்தீப் சிங், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், சிம்ரன் சிங், ஜெகதீஷா சுசித், தாஜிண்டர் சிங், ஹர்டூஸ் வில்ஜோன், மயங்க் அகர்வால், செல்டான் காட்ரீல், கிரிஸ் கெய்ல், கிளீன் மேக்ஸ்வெல், முகம்மது சமி, முஜிப் அர் ரஹ்மான், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், நிகோலஸ் பூரன், இஷான் போரெல், அர்ஷிப் சிங், முருகன் அஸ்வின்