ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சு!

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

CSK vs DC toss update
CSK vs DC toss update
author img

By

Published : Sep 25, 2020, 7:04 PM IST

ஐபிஎல் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.25) நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியையும், மற்றொன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேசமயம் டெல்லி அணி தனது முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே: முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஜோஷ் ஹசில்வுட்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, அன்ரிச் நோர்ட்ஜே,ஆவேஷ் கான், ககிசோ ரபாடா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.