ETV Bharat / sports

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம்: கோலி நம்பிக்கை! - ஐபிஎல் 2019

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நான்கு தோல்விகளை சந்தித்திருந்தாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு வாய்ப்புள்ளதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம்: கோலி நம்பிக்கை!
author img

By

Published : Apr 3, 2019, 2:05 PM IST

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நான்காவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில்,

"மார்கஸ் ஸ்டாய்னிஸ், மொயின் அலி ஆகியோர், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நன்கு ஆடினர். மைதானத்தில் பனிப்பொழிவு இருந்த காரணத்தால், நாங்கள் இன்னும் 15 முதல் 20 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால், ஆட்டம் சற்று பரபரபப்பாக இருந்திருக்கும்.

ஆடுகளத்தின் தன்மை சற்று மந்தமாக இருந்ததால், ரன்களை அடிப்பது கடினமாக இருந்தது.ஃபீல்டிங்கில் ஏராளமான கேட்சுகளை நாங்கள் கோட்டைவிட்டோம். இந்தத் தொடரில் நாங்கள் இன்னும் 10 போட்டிகளில் ஆட உள்ளோம். இந்தத் தொடரில் நாங்கள் செய்த தவறுகளை சரி செய்துகொண்டு, வரும் போட்டிகளில் போராட்ட குணத்துடன் ஆடினால், பிளே ஆஃப் சுற்றுக்கு நிச்சயம் முன்னேறுவோம்" என்றார்.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு அணி இந்தத் தொடரில் தனது ஐந்தாவது போட்டியில்,கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி நாளை மறுநாள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு நடைபெறவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.