தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடவுச்சீட்டுடன் கூடிய இந்திய நுழைவு இசைவு புகைப்படத்தை பதிவேற்றி, இது என்ன ஆச்சரியம் என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
12ஆவது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி ஆடிய ஆறு போட்டிகளில் அனைத்திலும் தோல்வியடைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தி எழுந்துள்ளது. அதேபோல், பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குற்றம் சாட்டினார். எனவே, பெங்களூரு அணியின் பந்துவீச்சை வலுப்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்க வேகம் ஸ்டெயின் வரவழைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் நாதன் கவுல்டர் நைல்-க்கு பதிலாக ஸ்டெயின் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 2008-2010 வரை பெங்களூரு அணிக்காக ஸ்டெயின் விளையாடியது குறிப்பிடத்தக்கது.