ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து, ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 50 நிமிடங்களுக்கு தாமதமாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தப் போட்டியில் ஓவர்கள் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்குப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஆடுகளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை, மைதானத்தை பரமாரிக்கும் ஊழியர்கள நவீன தொழில்நுட்பத்துடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருவேளை மழை தொடர்ந்து பெய்தால், ஆட்டம் முழுவதுமாக கைவிடப்படும். அப்படி ஆனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். இதனால், ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோகும் எனக் கருதப்படுகிறது.