ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொல்கத்தா அணியை பேட்டிங் ஆடப் பணித்தார்.
இந்தப் போட்டியில் மும்பை அணியில் லிவிஸ், பரிந்தர் ஸ்ரண் ஆகியோருக்கு பதிலாக மெக்லனகன், இஷான் கிஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா அணியில் பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் கொல்கத்தா வெற்றிபெற்றால் தான் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணி விவரம்: ரோஹித் ஷர்மா(கேப்டன்), டி காக், சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, பொல்லார்ட், ராகுல் சாஹர், மலிங்கா, பும்ரா, மெக்லனகன், இஷான் கிஷன்.
கொல்கத்தா அணி விவரம்: தினேஷ் கார்த்திக்(கேப்டன்), கில், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, ரஸல், நிதிஷ் ராணா, சுனில் நரைன், ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா, ஹாரி குர்னே, சந்தீப் வாரியர்.