ETV Bharat / sports

பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி! - பிளே ஆஃப் சுற்றில் டெல்லி

டெல்லி: பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!
author img

By

Published : Apr 28, 2019, 7:59 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான 46ஆவது லீக் போட்டி டெல்லி ஃவெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, 188 ரன் இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியில் பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் அணிக்கு சிறந்த தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இவ்விரு வீரர்களும் 63 ரன்களை சேர்த்த நிலையில், பார்திவ் படேல் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 23 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 17 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால், பெங்களூரு அணி 11.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து 103 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே (24), ஹென்ரிச் கிளாசன் (3) ஆகிய ரன்களில் ஆட்டமிழந்ததால், பெங்களூரு அணியின் வெற்றிக்கு 7 ஓவர்களில் 77 ரன்கள் தேவைப்பட்டன.

இந்த இக்கட்டான தருணத்தில் டெல்லி அணி நேர்த்தியாக பந்து வீசியது. இதனால், களத்தில் இருந்த குர்கிரத் சிங் மான், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரால் அதிரடியாக ஆட முடியாமல் போனது. இதன் விளைவாக, கடைசி 9 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், குர்கிரத் சிங் மான் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைதொடர்ந்து கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 9 ரன்களை மட்டுமே எடுத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால், டெல்லி அணி இப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், டெல்லி அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.