நாட்டிங்காம் (இங்கிலாந்து): இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஆக.6) தொடங்கியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாளில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மூன்றாம் நாள் ஆட்டம்
இந்நிலையில், கே.எல். ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 7 ரன்களுடனும் தொடங்கினர். மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்தியா 132 ரன்களை எடுத்தபோது, இன்றும் மழை குறுக்கிட்டதால் சிறிதுநேரம் ஆட்டம் தள்ளிப்போனது. ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே ரிஷப் பந்த் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சதத்தை இழந்த ராகுல்
இதன்பின்னர் களமிறங்கிய ஜடேஜா, கே.எல். ராகுல் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 60 ரன்களைச் சேர்த்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 84 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி மூன்று விக்கெட்டுகளை கையில் வைத்திருந்த இந்திய அணி, அப்போது 22 ரன்களில் முன்னிலைப் பெற்றிருந்தது.
ஜடேஜா 'ஜோர்'
-
Ravindra Jadeja goes past 2000 Test runs with a glorious boundary 👏👏#TeamIndia | @imjadeja pic.twitter.com/HA7sizpJUq
— BCCI (@BCCI) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ravindra Jadeja goes past 2000 Test runs with a glorious boundary 👏👏#TeamIndia | @imjadeja pic.twitter.com/HA7sizpJUq
— BCCI (@BCCI) August 6, 2021Ravindra Jadeja goes past 2000 Test runs with a glorious boundary 👏👏#TeamIndia | @imjadeja pic.twitter.com/HA7sizpJUq
— BCCI (@BCCI) August 6, 2021
அடுத்த நான்காவது ஓவரில் ஜடேஜா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும், ஜடேஜா 15 ரன்களை எடுத்திருந்த போது டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 2,000 ரன்களை எடுத்து, 200 விக்கெட்டை வீழ்த்திய ஐந்தாவது வீரர், மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஜடேஜா வெளியேறிய பிறகு ஷமியும் பும்ராவும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்துச்சென்றனர்.
இதையடுத்து, முகமது ஷமி 13 ரன்கள், பும்ரா 28 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் (84.5 ஓவர்களில் 278 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
-
James Anderson, at 39, becomes the third-highest wicket-taker in Test cricket 🐐#ENGvIND | #WTC23 pic.twitter.com/vo874jWePa
— ICC (@ICC) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">James Anderson, at 39, becomes the third-highest wicket-taker in Test cricket 🐐#ENGvIND | #WTC23 pic.twitter.com/vo874jWePa
— ICC (@ICC) August 6, 2021James Anderson, at 39, becomes the third-highest wicket-taker in Test cricket 🐐#ENGvIND | #WTC23 pic.twitter.com/vo874jWePa
— ICC (@ICC) August 6, 2021
இரண்டாம் இன்னிங்ஸ் - இங்கிலாந்து
இதையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளைக்கு முன்வரை விக்கெட் இழப்பின்றி 11 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 84 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஒரு செஷன் மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனியின் ப்ளூ டிக் நீக்கம்; சில மணிநேரத்தில் சேர்ப்பு... நடந்தது என்ன?