ஜோகன்னஸ்பர்க் : இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா, காயம் அடைந்த விராத் கோலி இல்லாத நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக உயர்த்தப்பட்டதை அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான துணைக் கேப்டனாக திங்கள்கிழமை (ஜன.3) நியமிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோலி முதுகு வலி காரணமாக விலகியுள்ளார்.
இதற்கிடையில் அவரைப் போல் ஸ்ரேயாஸ் ஐயரும் வயிறு வலி காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியின் துணை கேப்டனராக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
![Bumrah appointed vice-captain for second Test, Iyer misses out due to stomach bug](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/96b2496976f9f24dfeebe32f9be5764c_1108a_1628695427_242.jpg)
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : SA vs IND: தென் ஆப்பிரிக்காவை செஞ்சூரியனில் தோற்கடித்த முதல் ஆசிய அணி இந்தியா